தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உள் விவகாரங்களில் தலையிடுபவர்களுக்கு வெங்கையா நாயுடுவின் அறிவுரை இதுதான்! - Venkaiah Naidu

டெல்லி: கேட்கப்படாத ஆலோசனைகளை வழங்க வேண்டாம் என இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடும் நாடுகளுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

VP Naidu
VP Naidu

By

Published : Apr 10, 2021, 9:17 AM IST

Updated : Apr 10, 2021, 9:42 AM IST

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஜம்மு என்ற கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நமது பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் நம்மிடம் உள்ளது. இந்த விஷயத்தில் எந்தவொரு நாடும் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ உரிமை இல்லை.

கேட்கப்படாத ஆலோசனைகள் வழங்க முயற்சிக்கும் சில நண்பர்களுக்கு நான் அறிவுறுத்துவது என்னவென்றால், மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட உரிமையில்லை, உங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளில் உங்களது கருத்துகளைக் கூறிக்கொள்ளுங்கள்.

எங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எங்களிடம் திறன் உள்ளது. இந்த விவகாரத்தில் அவர் கவலைகொள்ளத் தேவையில்லை" என்றார்.

Last Updated : Apr 10, 2021, 9:42 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details