தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பதம்பூர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - bjd

ஒடிசா மாநிலம் பதம்பூர் சட்டமன்ற தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஒடிசாவின் பதம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
ஒடிசாவின் பதம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

By

Published : Dec 5, 2022, 10:26 AM IST

புவனேஸ்வர் (ஒடிசா): பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தில் உள்ள பதம்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை 7 மணிக்கு 319 வாக்குச் சாவடிகளிலும் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும். இடைத்தேர்தலில் 12 திருநங்கைகள் உட்பட 2.57 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,400 காவல்துறையினரும், மத்திய துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டமன்றப் பகுதி மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக கருதப்பட்டதால், அந்தத் தொகுதியின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. எழுபத்தொன்பது வாக்குச் சாவடிகள் 'முக்கியமானவை' என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒடிசாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ்.கே.லோஹானி தெரிவித்தார்.

120 ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவு இணையதள ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 66 ஓட்டுச்சாவடிகள் சிசிடிவி கண்காணிப்பில் இருக்கும். 15 மாதிரி சாவடிகள் மற்றும் 6 பிங்க் சாவடிகளில் பெண் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உள்ளனர்.

உடல் ஊனமுற்ற வாக்காளர்களுக்கு பிக் அப் மற்றும் டிராப் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார். இடைத்தேர்தலில் 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் பிஜேடி, பிஜய் ரஞ்சன் சிங் பரிஹாவின் மரணத்தால் அவரது மகள் பர்ஷா சிங் பரிஹாவை வேட்பாளராக களமிறக்கியுள்ளனர். எதிர்க்கட்சியான பிஜேபியின் வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ மற்றும் கட்சியின் க்ருஷக் மோர்ச்சாவின் தலைவரான பிரதீப் புரோஹித் ஆவார்.

இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சத்ய பூசன் சாஹு இதற்கு முன் மூன்று முறை வெற்றி பெற்றிருந்தார். முதல்வர் நவீன் பட்நாயக் பிஜேடி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிக் தோமர், அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் மற்றும் பிஷ்வேஸ்வர் துடு ஆகியோர் புரோஹித்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையும் படிங்க:குஜராத் சட்டசபை 2ஆம் கடட் தேர்தல்... வாக்குப்பதிவு தொடங்கியது

ABOUT THE AUTHOR

...view details