தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் பொதுமக்களுக்கு அழைப்பு - வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் புதுச்சேரி

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் புதுச்சேரியில் நடத்தப்படும் இணைய வழி வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

voter awareness contests in puducherry
voter awareness contests in puducherry

By

Published : Feb 20, 2022, 3:22 AM IST

புதுச்சேரி: இதுகுறித்து புதுச்சேரி ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான வல்லவன் கூறுகையில், "இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் என்னுடைய வாக்குரிமை என்னுடைய எதிர்காலம், ஒற்றை வாக்கின் வலிமை என்னும் கருத்தை மையமாக கொண்ட இணைய வழி போட்டிகள் மார்ச் 15ஆம் தேதி நடக்கிறது.

இந்த போட்டிகளில் மாணவர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் கலந்து கொள்ளலாம். வெற்றிபெறுவோருக்கு பரிசு தொகை, பரிசு பொருள் வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் இதில் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் https://voterawarenesscontest.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

வினாடி-வினா, பாட்டு போட்டி, காணொளி போட்டி, வாக்களிப்பது தொடர்பான முழக்கம், சுவரொட்டி தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். முன்னதாக வாக்களித்தல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துறைசார்ந்த் அலுவலர்களுடன் ஆட்சியர் வல்லவன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை பதவியேற்று ஓராண்டு நிறைவு

ABOUT THE AUTHOR

...view details