உத்தரப் பிரதேசத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 58 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கியது. மாநிலத்தில் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அன்று வெளியிடப்படும்.
இந்நிலையில், வாக்குப் பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் எம்பியும் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில், "மக்கள் அனைவரும் வெளியே வந்து நாடு அனைத்து அச்சத்திலிருந்தும் விடுதலை பெற வாக்களிக்க வேண்டும்" எனக் கோரியுள்ளார்.
உத்தரப் பிரதேச தேர்தல் பல்முணை போட்டியாக நடைபெறுகிறது. ஆளும் பாஜக ஒருபுறமும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தனது கூட்டணியுடன் ஒரு புறமும் பிரதான சக்திகளாக மோதிக்கொள்கின்றன.
அதேவேளை, மயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியும் தனித்து களம் காண்கின்றன. இந்த நான்கு மட்டுமல்லாது, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகளும் தேர்தலில் களம் காண்கின்றன.
இதையும் படிங்க:Hijab Row: ஹிஜாப் வழக்கு மூன்று நீதிபதி அமர்வுக்கு மாற்றம்