பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 07) காணொலி காட்சி மூலம் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணிகளைத் தொடங்கிவைக்கவுள்ளார். இந்த நிகழ்வில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மோடி, வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள சீர்திருத்தங்கள் தேவை என தெரிவித்துள்ளார்.
வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிவரும் நிலையில், இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "முந்தைய காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் தற்போது சுமையாக மாறியுள்ளது. முழுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதில் அரசுக்கு நம்பிக்கை உள்ளது. முன்பெல்லாம், சீர்திருத்தங்கள் சிறிது சிறிதாக நிறைவேற்றப்பட்டது.