ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கனா மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக இருக்கும் எனவும் அதற்குள் ஆந்திர மாநிலத்திற்கு தலைநகரை தீர்மானிக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு அமராவதியை தலைநகராக அறிவித்து அங்கு தலைமைச் செயலகம் உள்ளிட்ட கட்டுமான பணியை தொடங்கினார். ஆனால், அதன் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட பணிகளை கிடப்பில் போட உத்தரவிட்டதாக தெரிகிறது.