டெல்லி: 2011ஆம் ஆண்டு கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, கார்த்தி சிதம்பரம் சீனர்களுக்கு விசா நீட்டிப்பு செய்ய 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்தப்புகாரில் பேரில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த நிலையில் இன்று (ஜூன் 24) வழக்கு நீதிபதி ஜஸ்மீத் சிங் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, ஜூலை 12ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது என்றார்.
இதையடுத்து நீதிபதி, வழக்குத் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க:கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!