ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா நேற்று (செப் 9) கலந்துகொண்டார். அப்போது மேடையில் பொதுமக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், “டிஆர்எஸ் கட்சி குடும்ப அரசியலில் ஈடுபட்டுள்ளது. இந்த குடும்ப அரசியலில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். தன் குடும்பத்தை வளர்பதில் மட்டும் ஈடுபடாமல், மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்கள் குறித்தும் அரசியல் தலைவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்” என்று பேசி கொண்டிருந்தார்.
மேடையில் பேசிக்கொண்டிருந்த முதலமைச்சர் மைக்கை திடீரென பிடுங்கிய தொண்டரால் பரபரப்பு - விநாயகர் சதுர்த்தி
ஹைதரபாத்தில் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென மேடைக்குள் புகுந்த தொண்டர் அவரது மைக்கை பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
![மேடையில் பேசிக்கொண்டிருந்த முதலமைச்சர் மைக்கை திடீரென பிடுங்கிய தொண்டரால் பரபரப்பு Viral video Man Moves Mic Away Confronts Himanta Sarma Himanta Sarma அஸ்ஸாம் முதலமைச்சர் மைக்கை பிடுங்கிய மர்ம நபர் அஸ்ஸாம் முதலமைச் மைக் பிரச்ணை ஹிமந்தா பிஸ்வா அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி திருவிழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16331143-thumbnail-3x2-mike.jpg)
ஹிமந்தா பிஸ்வா
மேடையில் பேசிக்கொண்டிருந்த முதலமைச்சர் மைக்கை திடீரென பிடுங்கிய தொண்டரால் பரபரப்பு
அப்போது மேடைக்குள் நுழைந்த டிஆர்எஸ் தொண்டர் ஒருவர் ஹிமந்தா பிஸ்வா பேசிக்கொண்டிருந்த மைக்கை பிடுங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹிமந்தா பிஸ்வா, அந்த நபரிடம் இருந்து மைக்கை பிடுங்கும் முயன்றார். அப்போது அத்துமீறி நுழைந்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் அந்த தொண்டர் மேடையில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.