பஞ்சாப்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிறைகளில் விஐபி அறைகளை ஒழிக்க முடிவு செய்துள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசிய அவர் "சிறைகளில் விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம். குற்றவாளிகள் சிறைக்குள் டென்னிஸ் விளையாடுவது எல்லாம் தெரியவந்துள்ளது. சிறைகளில் விஐபி அறைகளை மூடுகிறோம். இது தொடர்பாக அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதல்வர் பகவத் மான் கூறினார். ஆம் ஆத்மி அரசு 710 மொபைல் போன்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை ஒடுக்கியுள்ளது என்றார்.
பஞ்சாப் அரசாங்கம் "வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைகள் மற்றும் இலவச 300 யூனிட் மின்சாரம் என தொடர்ந்து மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளது" என்று மான் கூறினார். சிரோமணி அகாலி தளம், காங்கிரஸ் மற்றும் பாஜகவில் இருந்த பல மூத்த தலைவர்களின் பாதுகாப்பை மான் அரசாங்கம் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, சிறைகளில் விஐபி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல், முன்னாள் முதல்வர் ராஜீந்தர் கவுர் பட்டல், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் ஆகியோரின் பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 127 போலீசார் மற்றும் ஒன்பது பைலட் வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டன. இப்போது அவை மீண்டும் காவல் நிலையத்திற்கும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படும் என்று மான் அரசாங்கம் கூறுகிறது.
இதையும் படிங்க:’என்னிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் பெருமளவு ஐஏஎஸ் அதிகாரி சிங்காலுடையது’- சுமன்