தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பசவராஜ் பொம்மை வெற்றி - டி.கே.சிவக்குமார், ஹெச்.டி குமாரசாமி, சித்தராமையா முன்னிலை!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றுள்ளார். டி.கே.சிவக்குமார், ஹெச்.டி குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

Karnataka
கர்நாடகா

By

Published : May 13, 2023, 1:10 PM IST

கர்நாடகா: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில், சுமார் 120 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 72 இடங்களில் பாஜகவும், 24 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் முன்னிலை வகிக்கின்றன.

ஷிக்கான் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமதுகான் தோல்வியடைந்தார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் ஹெச்.டி குமாரசாமி, சன்னபட்னா தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போராட்டியிட்ட பாஜக வேட்பாளர் சிபி யோகேஷ்வரா பின்னடைவை சந்தித்து வருகிறார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போராட்டியிட்ட பாஜக வேட்பாளர் அசோக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, வருணா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சோமன்னா பின்னடைவை சந்தித்து வருகிறார்.

ஹூப்ளி தார்வாட் மத்தி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் ஹெட்டர் தோல்வியடைந்துள்ளார். பாஜக வேட்பாளர் மகேஷ் தெங்கின்காய் வெற்றி பெற்றுள்ளார். ஜெகதீஷ் ஷெட்டர் அண்மையில் பாஜகவிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தவர்.

ராமநகர் தொகுதியில் ஹெச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் ஹூசைன் வெற்றி பெற்றார்.

பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் கிருஷ்ணப்பா வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கே.ரமேஷ் தோல்வியடைந்தார்.

இதையும் படிங்க: Karnataka Result: 15 அமைச்சர்கள் தோல்வி முகம்.. கர்நாடகாவில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு!

ABOUT THE AUTHOR

...view details