டெல்லி:அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார். 7,897 வாக்குகள் பெற்று கார்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசி தரூர் ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். இன்று காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
"வாக்குப்பதிவில் விதிமீறல்கள் நடந்தன" - சசி தரூரின் தேர்தல் முகவர் புகார்!
காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவில் விதிமீறல்கள் நடந்ததாக சசி தரூரின் தேர்தல் முகவரான சல்மான் சோஸ் புகார் தெரிவித்துள்ளார்.
violation
முன்னதாக வாக்குப்பதிவில் விதிமீறல்கள் நடந்ததாக சசி தரூரின் தேர்தல் முகவரான சல்மான் சோஸ் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மத்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பல இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள், கார்கேவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததாகவும் தரூர் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.