தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குண்டு குழியுமான சாலை... அரசுக்கு காத்திருக்காமல் சீரமைத்த இளைஞர்கள்! - villiyanur pathukannu road at puducherry

புதுச்சேரி: சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை அரசு சீரமைக்க தவறியதால், அப்பகுதி இளைஞர்கள் ஜல்லி சிமெண்ட் போன்றவற்றை கொண்டு சீரமைத்ததை கிராம மக்கள் பாராட்டியுள்ளனர்.

புதுச்சேரி
புதுச்சேரி

By

Published : Jan 12, 2021, 6:58 PM IST

புதுச்சேரியில் இந்தாண்டு வழக்கத்துக்கு அதிகமாக கனமழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இந்நிலையில் வில்லியனூர் பத்துகண்ணு சாலையில் கூடப்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் ஜல்லிகள் பெயர்ந்து மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் திடீர் பள்ளத்தால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகினறன. இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், துணை ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல் கூடப்பாக்கம் இளைஞர்கள் ஜல்லி சிமெண்ட் போன்றவற்றை கொண்டு சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைத்தனர். இளைஞர்களின் செயலை கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் பாராட்டினர். இதற்கான உதவியினை முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் முருகையன் செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details