தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரில் 5 டிரான்ஸ்பார்மர்கள் திருட்டு.. 5 கிராமங்கள் இருளில் மூழ்கியது! - டிரான்ஸ்பார்மர் திருட்டு

பிகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் 5 டிரான்ஸ்பார்மர்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடியதால் 5 கிராமங்கள் இருளில் மூழ்கியது.

பிஹாரில் டிரான்ஸ்பார்மர்கள் திருடப்பட்டதால் இருளில் முழ்கிய கிராமங்கள்
பிஹாரில் டிரான்ஸ்பார்மர்கள் திருடப்பட்டதால் இருளில் முழ்கிய கிராமங்கள்

By

Published : Dec 13, 2022, 10:43 AM IST

பிஹார்: சிவான் மாவட்டத்தில் ரகுநாத்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஐந்து கிராமங்களில் வார்டு எண் 12 மற்றும் 14இல் மின்மாற்றிகளைத் திருடர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார 5 கிராமங்கள் ரகுநாத்பூர் பாஜா, பஞ்வார், விவசாய பண்ணை, அம்வாரி மற்றும் முரார்பட்டி இருளில் மூழ்கின.

டிரான்ஸ்பார்மர் திருடப்பட்ட சம்பவத்தையடுத்து, ஐந்து கிராமங்களிலும் 16 KVA மின்மாற்றி நிறுவப்பட்டது. கிராமத்தை இருளில் வைத்து குற்ற சம்பவங்களில் ஈடுபடவே திருடர்கள் விரும்புவதாக மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து டிரான்ஸ்பார்மர் திருடு போனது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரியத்துக்குத் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து மின்வாரிய ஜேஇ அமித் மவுரியா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையில், காவல் நிலைய தலைவர் தன்வீர் ஆலம் கூறுகையில், "வாய்வழி தகவல் கிடைத்துள்ளது. வழக்கு பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

"5 கிராமங்களின் டிரான்ஸ்பார்மர்கள் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட இடத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டு உள்ளூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எஃப்ஐஆர் பதிவு செய்ய எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது."என கூறினார்

இதையும் படிங்க: OTP இல்லாமல் மிஸ்டு கால் மூலம் ரூ.50 லட்சம் திருட்டு.. பொதுமக்கள் உஷார்!

ABOUT THE AUTHOR

...view details