தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலர்களை நிர்வாணமாக்கி நடக்க விட்ட கிராம மக்கள் - ஜார்கண்டில் கொடூரம் - ஜார்கண்ட் மாநிலம் தும்கா

ஜார்கண்ட் மாநிலத்தில் காதலர்கள் இருவரை கட்டாயமாக நிர்வாணப்படுத்தி அவர்களை தெருக்களில் நடக்க வைத்த 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Villagers
Villagers

By

Published : Sep 29, 2021, 9:13 AM IST

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் கூலி வேலை செய்துவருகிறார். இந்த பெண்ணின் கணவர் குற்றச் செயலுக்காக ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளதால், அருகே இருக்கும் பகுதிகளுக்கு சென்று வேலை செய்வதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், வேலை செய்யும் ஊரைச் சேர்ந்த ஒரு நபருடன் அந்த இளம்பெண்ணுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்துவந்துள்ள நிலையில், இவ்விகாரம் அந்த பெண்ணின் கிராம மக்களுக்கு தெரியவந்துள்ளது.

அந்த பெண்ணுடன் அந்த நபர் ஒன்றாக இருக்கும்போது இருவரையும் பிடித்த கிராம மக்கள் இருவரையும் தாக்கி நிர்வாணப்படுத்தியுள்ளனர். மேலும், அவர்களை நிர்வாணமாக தெருவில் நடக்க விட்டு தண்டனை வழங்கியுள்ளனர்.

இந்த கோரச் செயல்குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க:பண்டிகை காலம் வருது... உஷார் மக்களே! - அரசு எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details