தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Manipur violence: "எங்கு செல்வது எனத் தெரியவில்லை": கதறும் மணிப்பூர் கிராம மக்கள்! - விவசாயம்

மணிப்பூரில் நீடிக்கும் வன்முறை காரணமாக விவசாயம் உள்ளிட்ட தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 25, 2023, 10:31 PM IST

Manipur violence: "எங்கு செல்வது எனத் தெரியவில்லை": கதறும் மணிப்பூர் கிராம மக்கள்!

இம்பால்:மணிப்பூர் மாநிலம், இம்பால் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடங்பந்த் கிராம மக்கள் வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை எனவும்; ராணுவத்தின் தோட்டாக்களுக்கு பயந்து அன்றாட வாழ்வை நகர்த்துவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

கடங்பந்த் கிராமம் மெய்தே சமூகத்தினர் வாழும் கடைசி ஆதிக்கப் பகுதியாக உள்ளது. இங்குள்ள மக்கள் கலவரம் காரணமாக விவசாயம் உள்ளிட்ட தங்களின் வாழ்வாதாரம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்னை கலவரமாக வெடித்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் இதில் கொல்லப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகின. கடந்த மூன்று மாதங்களாக அங்கு நடைபெற்று வரும் இந்த கலவரத்தால் இணையச் சேவைகள் முடக்கப்பட்டன. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்ற எவ்வித தகவலும் வெளியில் வராமல் தடைபட்டது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் மீண்டும் இணையச் சேவை வழங்கப்பட்ட நிலையில் அதிர்ச்சியூட்டும் பல்வேறு காணொலிகள் இணையத்தில் வைரலானது. அதிலும் குறிப்பாக இரண்டு பெண்கள் போராட்டக்காரர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு நிர்வாணமாகச் சாலையில் இழுத்துவரப்பட்ட காட்சி பார்ப்போரைக் கண்கலங்கச் செய்தது.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் வரை இந்தச் செய்தி தீயாகப் பரவிய நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்தான் தற்போது இந்த கலவரம் காரணமாக, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் விரைவில் இயல்பு நிலை திரும்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் கடங்பந்த் கிராம பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்துப் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த கிராமத் தலைவர் சுனில், "விவசாயத்தை முற்றிலும் கைவிடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். உற்பத்தி செய்யப்பட்ட நெல்லுக்கு அடுத்த ஆண்டு விலை கிடைக்காது. எங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.

அங்குள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் களைகள் மூடி, முற்றிலும் பராமரிப்பு இன்றி காட்சி கொடுக்கும் நிலையில் மக்கள் அன்றாட உணவுக்குக் கூட திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மணிப்பூர் மாநிலத்தின் கலவரம் நடைபெறும் இடங்கள் மற்றும் மலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அம்மாநில அரசு சுமார் 2 ஆயிரம் பாதுகாப்புப் படையினரை பணியமர்த்தியுள்ளது.

இருந்தபோதிலும், சில பகுதிகளில் தொடர்ந்து வன்முறைகள் நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் சொந்த மாநிலத்தை விட்டு வேறு எங்கேயாவது சென்று விடலாமா என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்துப் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த மைஸ்னம் ரஞ்சனா தேவி, ’’இக்குழுவில் இருக்கும் சில இனக்குழுக்களால் தோட்டாக்களுக்குப் பயந்து வயலில் இறங்கி வேலை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். வீட்டில் கூட நிம்மதியாக இருக்கவோ, குழந்தைகளை வைத்துக்கொண்டு தூங்கவோ கூட முடியவில்லை.

நாங்கள் இங்கு நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கிறோம். விவசாய வேலைகளைப் பார்க்க முடியவில்லை. எங்கள் நிலைமை குறித்து யாரிடமும் சொல்லவும் முடியவில்லை" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே எங்களின் மிகப்பேரிய எதிர்பார்ப்பாக உள்ளது என கடங்பந்த் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:5வது சுற்றுவட்ட பாதைக்கு உயர்ந்த சந்திரயான்-3 விண்கலம்; இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!

ABOUT THE AUTHOR

...view details