ஹைதராபாத்:ஒவ்வொரு ஆண்டு இறுதி நாட்களில் பாலிவுட் நட்சத்திரங்கள் வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், ஏற்கனவே கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா அனன்யா பாண்டே மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் புத்தாண்டு கொண்டாட வெளிநாடுகளுக்கு சென்றுள்ள நிலையில் பாலிவுட்டின் புது காதல் ஜோடியான விஜய் வர்மா மற்றும் தமன்னா ஆகியோர் புறப்பட்டுள்ளனர்.
இன்று காலை மும்பை விமான நிலையத்திலிருந்து கிளம்பிய இந்த காதல் ஜோடி, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டும், ஊடகத்தினருடன் கலந்துரையாடி விட்டும் சென்றனர். விஜய் வர்மா, தமன்னா ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இருவரும் கோவாவில் ஒன்றாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் சில மாதங்களுக்கு முன் வெளியானது.