தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"dealer of death"... ஜவான் படத்தில் விஜய் சேதுபதியின் போஸ்டர் வெளியீடு! - yogi babu

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 24, 2023, 5:58 PM IST

ஹைதராபாத்:அட்லி இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான். இத்திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத், தீபிகா படுகோன், சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, சுனில் க்ரோவர், யோகி பாபு, அஸ்தா அகர்வால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். சில நாட்களுக்கு முன்பாக இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த சில நாட்களாக இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் போஸ்டரை படக் குழு ஓவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.

ஷாருக்கான், நயன்தாரா போஸ்டர்கள் வரிசையில் தற்போது விஜய் சேதுபதியின் மிரட்டலான போஸ்டர் வெளியாகி உள்ளது. கருப்பு நிற கண்ணாடியுடன் மிரட்டல் பாணியில் விஜய் சேதுபதி இருக்கும் போஸ்டரை ஜவான் படத்தின் நாயகன் ஷாருக்கான் வெளியிட்டு உள்ளார். இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி போஸ்டர் "dealer of death" என்ற வாசகத்துடன் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:Jailer audio launch:ஜெயிலர் ஆடியோ லான்ச்க்கு 1000 இலவச பாஸ்கள் - சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிரடி அப்டேட்

நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள நடிக ஷாருக்கான் "there's no stopping him... or is there?" "be careful!" என்ற கேப்ஷனுடன் வெளியிட்டு உள்ளார். விஜய் சேதுபதியையும் ஷாருக்கானையும் ஒரே படத்தில் எதிரும் புதிருமாக காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஜவான் படத்தில் வெளியாகும் ஒவ்வொரு கதாபாத்திர போஸ்டரும் ஸ்டைலிஷாக உள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஜவான் படத்தில் மிகப்பெரும் சர்ப்ரைஸாக நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜவான் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. ஷாருக்கான் நடித்து கடைசியாக வெளியான பதான் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரும் வெற்றிப் படமாக மாறிய நிலையில் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

இதையும் படிங்க:Kanguva First Look : கங்குவா பர்ஸ்ட் லுக்கில் மிரட்டும் சூர்யா!

ABOUT THE AUTHOR

...view details