கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா சுமார் ரூ.9,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் சிக்கிய நிலையில், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டன் நாட்டிற்கு தப்பியோடினார்
பிரிட்டனில் அடைக்கலம் புகுந்துள்ள பொருளாதார குற்றவாளியாக இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், அவரின் ரூ.14 கோடி மதிப்பிலான சொத்து பிரான்ஸ் நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.