கேரளா (மூணார்): தென்னகத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், தென்னிந்தியாவின் சுற்றுலா தளங்களுள் மிகவும் முக்கியமான தலமாகும். இதனால் மூணாருக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மூணார் சுற்றுலா தளம் வனப்பகுதி நிறைந்த இடமாக திகழ்வதால், காட்டு யானை, காட்டெருமை, மான், வரையாடு போன்றவை அடிக்கடி வனபகுதியில் இருந்து வெளியேறி, உணவு தேடி பொது இடங்களுக்கு வந்து செல்வது வழக்கம்.
வன விலங்குகளை காணும் பொதுமக்கள், புகைப்படம் எடுப்பதோடு, அதற்கு சில சமயங்களில் தாங்கள் கொண்டு வரும் உணவு மற்றும் தின்பண்டங்களை வழங்குவர். இந்த நிலையில், அவ்வாறு உணவு தேடி வந்த காட்டு யானை ஒன்று மூணார் அருகே அமைக்கப்பட்டு உள்ள பொது குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.