தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண்களிடம் ஆடை குறித்துப் பேசிய காவலரின் சர்ச்சைப் பேச்சு - பெண் காவலரின் வைரல் வீடியோ

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண்ணிடம் அவரது ஆடை குறித்துப் பேசிய காவலரின் சர்ச்சைப்பேச்சு காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண்களிடம் ஆடை குறித்து பேசிய காவலரின் சர்ச்சை காணொலி
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண்களிடம் ஆடை குறித்து பேசிய காவலரின் சர்ச்சை காணொலி

By

Published : Feb 27, 2022, 10:18 PM IST

புதுச்சேரி:கடற்கரை சாலை, அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் உள்ளிட்டப் பகுதிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை வார இறுதி நாட்களில் அதிகரித்துவருகிறது.

இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள புதுச்சேரி அரசும் சுற்றுலாவை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று புதுச்சேரி வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அரவிந்தர் ஆசிரமம் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது காவலர் ஒருவர், அவரிடம் அப்பெண் அணிந்துள்ள ஆடை குறித்துப் பேசியுள்ளார்.

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண்களிடம் ஆடை குறித்துப் பேசிய காவலரின் சர்ச்சை காணொலி

அதற்கு அந்தப் பெண் ஆடை குறித்து யாராவது புகார் தெரிவித்துள்ளார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், ”ஆடை குறித்து கேள்வி கேட்பதற்கு காவலருக்கு உத்தரவிட்டது யார்..?” உள்ளிட்டப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆதரவாகவும் எதிர்த்தும் கேள்விகள் சமூக வலைதளங்களில் வருவதால் காவலர் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கஞ்சா ஆசாமியின் வைரல் வீடியோ; காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details