புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியம், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இன்று (ஜூன்4) புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் சந்தித்தனர்.
பின்னர், தெலங்கானாவில் உள்ள ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் சிறிது நேரம் உரையாடினார்கள். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரியிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்கவேண்டும். மாநில அரசுகளின் மீது நிதி சுமைகளை ஏற்றக் கூடாது என மனுவில் கூறியிருப்பதை காணொலியில் பேசும் போது தெரிவித்தனர்.
இதையடுத்து ஜனநாயக முறைப்படி அமைப்புகள் கோரிக்கை வைத்தாலும் உரிய முறையில் அதனை ஏற்றுக்கொண்டு அரசு செயல்படும். இந்த மனுவை குடியரசுத் தலைவரிடம் அனுப்பி வைக்கப்படும் என ஆளுநர் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரண்டு நாட்களில் கோவின் தளத்தில் 'தமிழ்'