கர்நாடகா: கர்நாடகா மாநிலம் பகலகோட்டேயில் கடந்த சனிக்கிழமை(மே 14) பெண் வழக்கறிஞர் ஒருவர் மற்றும் அவரது கணவரை ஒருவர் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலானது . காயம் அடைந்த வழக்கறிஞர் சங்கீதா சிகாரி மற்றும் அவரது கணவர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தாக்கியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவில் வழக்கறிஞரை நடுரோட்டில் தாக்கிய நபர்- வைரலாகும் வீடியோ - கர்நாடகாவில் வக்கீலை நடுரோட்டில் வைத்து தாக்கிய நபர்
கர்நாடகாவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரையும், அவரது கணவரையும் நடுரோட்டில் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் மகான்தேஷ் சோழசகுடா அப்பகுதியில் இருக்கும் பாஜக பிரமுகர் ராஜு நாயக்கருடன் சேர்ந்து தனக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வருவதாகவும், வீட்டை இடித்ததாகவும் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் சங்கீதா ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இவர்களை மகாந்தேஷ் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மகான்தேஷ் இந்த குற்றத்தை தான் செய்யவில்லை என மறுத்துள்ளார்.
இதையும் படிங்க:கணவரின் இரண்டாவது திருமணத்தால் ஆத்திரம்... வீட்டுக்கு தீ வைத்த முதல் மனைவி... 4 பேர் உயிரிழப்பு!