ஐந்து மாநிலத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் இன்று வெளியாகிவருகின்றன. நாட்டில் கோவிட்-19 இரண்டாம் அலைப் பரவல் உச்சமடைந்துவருவதால், வாகனப் பேரணி, கூட்டம் கூடி வெடிவெடித்தல் போன்ற தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதையும் மீறி பல இடங்களில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.