அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, எட்டு மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள் அந்தந்த மாநில மொழிகளில் புதிய கல்வியாண்டு முதல் பயிற்றுவிக்கப்படுமென அறிவித்திருப்பதைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வரவேற்றுள்ளார்.
அவர் தனது ட்விட்டரில், "புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மலையாளம், பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஒடியா ஆகிய 11 மாநில மொழிகளில் பி-டெக் பாடத்தைக் கற்பிக்க அனுமதி வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.