தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெங்கையா நாயுடு 3 நாள் பயணமாக புதுச்சேரி வருகை

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூன்று நாள் பயணமாக புதுச்சேரி வருவதையொட்டி 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெங்கையா நாயுடு
வெங்கையா நாயுடு

By

Published : Sep 12, 2021, 10:20 AM IST

புதுச்சேரி:குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூன்று நாள் பயணமாக இன்று (செப்.12) பிற்பகல் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு விமானம் மூலம் வருகை தர உள்ளார்.

தொடர்ந்து ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் அப்துல் கலாம் கலை அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழு கோடியே 67 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள சூரிய மின்சக்தி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இது உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வளாகத்தில் உள்ள 15 மருத்துவமனைகள், விடுதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு 1.70 கோடி ரூபாய் மின் கட்டணம் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கலந்து கொள்கின்றனர்.

நாளை பயண விவரம்

நாளை (செப்.13) காலை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்று அங்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சூரிய ஒளி மின்சக்தி பயன்பாடு திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். ஆளுநர் மாளிகை சென்று ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் காலை (செப்.14) சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி கோரிமேடு, லாஸ்பேட்டை, காலாப்பட்டு, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகள் தடுப்புகள் அமைக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மோடி பிறந்தநாளை சமூகநீதி நாளாக ஏற்றுக் கொள்கிறோம்...’ - ஹெச்.ராஜா

ABOUT THE AUTHOR

...view details