டெல்லி : கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து துணை குடியரசுத் தலைவர் மாளிகை விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், “ஹைதராபாத்தில் இருக்கும் வெங்கையா நாயுடு கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் இன்று (ஜன.23) பாதிக்கப்பட்டார். அவர் அடுத்த ஒரு வாரத்திற்கு தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்வார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு புதன்கிழமை நடக்கும் குடியரசுத் தின விழாவில் பங்கேற்பது சந்தேகமே.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேர் கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 525 ஆக உள்ளது. கரோனா வைரஸிற்கு இதுவரை நாட்டில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 168 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை 21 லட்சத்து 87 ஆயிரத்து 205 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாட்டில் கரோனா பாதிப்பு விகிதம் 17.78 சதவீதம் ஆக உள்ளது.
இதையும் படிங்க : முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு கரோனா பாஸிடிவ்!