டெல்லி: நாட்டு மக்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், " அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். நமது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் பண்டிகையாக புத்தாண்டு உள்ளது. இந்த புத்தாண்டினை நாம் நம்பிக்கையுடனும், புத்துணர்ச்சியுடனும் வரவேற்போம். 2020ஆம் ஆண்டு பெருந்தொற்று மூலமாக நமக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது.