பெங்களூருவில் பிஇஎஸ் (PES) பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு(Venkaiah Naidu) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுனர் தாவர்சந்த் கெலாட், பிஇஎஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் தொரேசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர், "நான்காவது தொழில் புரட்சி நமது கதவுகளைத் தட்டுகிறது. அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள நமது பல்கலைக்கழகங்கள் புதிதாக உருவாகி வரும் 5ஜி தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, ரோபோ, உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு இந்தியா தற்சார்பு அடைவதையும் விண்வெளித் துறையில் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறுவதையும் நோக்கிப் பணியாற்ற வேண்டும்.