சண்டிகர்(பஞ்சாப்): பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்நாட்டில் பல்கலைக் கழக துணை வேந்தர் பதவிகள் 40- 50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பஞ்சாப் வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சத்பீர் சிங் கோசல் "சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ளார்" என்று குற்றம்சாட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனடியாக அவரை நீக்குமாறு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்னுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதுதொடர்பாக நேற்று (அக் 21) செய்தியாளர்களை சந்தித்த புரோகித், ‘துணைவேந்தர்கள் நியமனத்தில் தனக்கும் பங்கு இருக்கிறது. நான் 4 ஆண்டுகள் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தேன். அப்போது அங்கு மிகவும் மோசமான சூழ்நிலை இருந்தது. அந்த மாநிலத்தில் துணைவேந்தர் பதவிகள் ரூ.40-50 கோடிக்கு விற்கப்பட்டது.