டெல்லி:உத்திரப்பிரதேச அரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு வரைவு மசோதாவில் உள்ள ஒரு குழந்தை கொள்ளை விதிமுறையை நீக்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இது பல்வேறு சமூகங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்க வழிவகுக்கும் என்ற தெரிவித்துள்ளது.
அதேபோல, உத்திரபிரதேச அரசின் மக்கள் தொகை (கட்டுப்பாடு, உறுதிப்படுத்துதல், நலவாழ்வு) மசோதா 2021 இல் உள்ள, பெற்றோருக்கு பதிலாக குழந்தைகளுக்கு தண்டனை அல்லது வெகுமதி வழங்குதல் என்ற முரண்பாட்டை நீக்க வேண்டும் என இந்து அமைப்புகள், யோகி ஆதித்யநாத் அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளன.
புதிய வரைவு மசோதா
உத்திரபிரதேசத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்மாநில அரசு, புதிய வரைவு மசோதாவை வெளியிட்டுள்ளது. இந்த வரைவை பொது வெளியில் வெளியிட்டு, உத்திரபிரதேச மாநில சட்ட ஆணையம், பொதுமக்களின் கருத்தை கேட்டுள்ளது.
இப்புதிய வரைவு குறித்து, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர், அலோக் குமார் உத்திரப்பிரதேச மாநில சட்ட ஆணையத்திற்கு தனது பரிந்துரைகளைக் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்த வரைவின் முன்னுரை இது, மக்கள் தொகையை , உறுதிப்படுத்த இரண்டு குழந்தை விதிமுறையை மேம்படுத்தவுமான மசோதா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பொருளை விஸ்வ இந்து பரிஷத் ஏற்றுக்கொள்கிறது.
ஆனால், ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள், உத்திரபிரதேசத்தின் மொத்த கருவுறும் விகிதத்தை, 1.7 விகிதமாக குறைக்க முற்படும் மசோதாவின் நோக்கத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.