குடியரசுத் துணைத்தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மாநிலங்களைத் தலைவர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரான ஜெய்ராம் ரமேஷிடமிருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறைகள் தொடர்பான இரண்டு அறிக்கைகளைப் பெற்றார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நிலைக் குழுவிடமிருந்து 2 நடவடிக்கை அறிக்கைகளைப் பெற்ற வெங்கையா நாயுடு! - மாநிலங்களைத் தலைவர் வெங்கையா நாயுடு
டெல்லி: குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களைத் தலைவருமான வெங்கையா நாயுடு, நேற்று (நவ. 30) நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ஜெய்ராம் ரமேஷிடமிருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட இரண்டு அறிக்கைகளைப் பெற்றார்.
Venkaiah Naidu
மேலும், “பூமி அறிவியல், அணுசக்தி, உயிரி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியங்களுக்கான கோரிக்கைகள் குழுவின் 326 முதல் 332ஆவது அறிக்கைகளில் உள்ள பரிந்துரைகள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன” எனவும் பதிவிடப்பட்டுள்ளது.