குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, டிசம்பர் 28ஆம் தேதிமுதல் மூன்று நாள் பயணத்தை மேற்கொள்வதாக அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று (டிசம்பர்28) அதிகாலை வெங்கையா நாயுடு விஜயவாடா விமான நிலையம் வந்தடைந்தார்.
விஜயவாடா மாவட்ட அலுவலர்கள் வெங்கையா நாயுடுவைப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஆந்திர ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிசந்தன், அமைச்சர் வேலம்பள்ளி சீனிவாச ராவ், தலைமைச் செயலாளர் நிலம் சாவ்னி, மாவட்ட ஆட்சியர் இம்தியாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அவரை வரவேற்றனர்.