பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கான கொள்கை வடிவம் குறித்து, மக்களவையில் நிதின் கட்கரி பேசினார். அவர் கூறுகையில், ஆட்டோமொபைல் துறையின் வர்த்தகமானது ரூ.4.5 கோடியாக உள்ள நிலையில் இந்தத் திட்டதின் மூலம் ரூ.10 லட்சம் கோடியாக உயரும்.
தனிநபர் வாகனங்கள் 20 வருடங்களை தாண்டினாலோ, கமர்சியல் வாகனங்கள் 15 வருடங்களை தாண்டினாலோ அவற்றை சோதனைக்கு உட்படுத்தி பயன்பாட்டிலிருந்து நீக்க இந்த கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பழைய, மோசமான வாகனங்களை குறைத்து, காசு மாற்றை கட்டுப்படுத்தி, சாலை பாதுகாப்பை உறுதி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.