புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையின் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த ஒரு வார காலமாக பெய்துவரும் கனமழை காரணமாக நீர் நிரம்பி வருகிறது.
அதனால் வீடூர் அணை எந்நேரத்திலும் திறக்கப்பட உள்ளது. இந்த நீர் புதுச்சேரி மாநிலத்தின் எல்லையில் உள்ள சாரங்கபாணி ஆற்று வழியாக புதுச்சேரிக்கு வரும் இந்த தண்ணீர் புதுச்சேரி வம்பு பட்டு, செல்லிப்பட்டு வழியாக வில்லியனூர் சென்று அங்கிருந்து புதுச்சேரி கடலில் கலக்கிறது.
ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வீடூர் அணை எந்த நேரம் திறக்கப்படலாம் என்பதால் புதுச்சேரி வில்லியனூர் வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில் காவல் துறையினர் செல்லிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தண்டோரா, ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
ஆற்றோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் கால்நடைகளை ஆற்றோர பகுதிகளில் மேய்ச்சலுக்கு ஓட்டி வருவதை தவிர்க்குமாறும், பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:பொருளாதாரத்தை ரிவர்ஸ் கியர் போட்டு செலுத்தும் பிரதமர் - ராகுல் காந்தி காட்டம்