டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான போப் பிரான்சிஸின் பிரதிநிதி பேராயர் லியோபோல்டோ கிரெல்லி, அக்.8 ஆம் தேதி தமிழ்நாடு ஆயர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "என்ஜிஓக்களாக பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளைகளில் இருந்து வரும் நிதி ஆதாரங்கள் கத்தோலிக்க பங்குதந்தையர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும், அரசியல் செல்வாக்கை வளர்த்து கொள்ளவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அதில் இவ்வாறான நடைமுறைகள் கேனான் சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது. கேனான் சட்டம் 286 இன் படி, அறக்கட்டளையின் நிதி ஆதாரங்களை பங்குதந்தையர்கள் தங்களின் சொந்த நலனுக்காக தாங்களாகவோ, அல்லது மற்றவர்கள் மூலமாகவோ வணிகம் அல்லது வர்த்தகம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.