ஹூப்ளி: கர்நாடகா மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்த சந்திரசேகர் குருஜி, மும்பையில் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்தார். பிறகு வாஸ்து நிபுணராக வளர்ந்து மக்களிடையே பிரபலமடைந்தார்.
மூன்று நாட்களுக்கு முன்பு, சந்திரசேகர் குருஜியின் குடும்பத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்ததாகவும், அந்த துக்க நிகழ்ச்சிக்காக அவர் ஹூப்ளி வந்ததாகவும் தெரிகிறது.
சந்திரசேகர் குருஜி பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை இந்த நிலையில், ஹோட்டல் ஒன்றில் சந்திரசேகர் குருஜி இரண்டு மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் ஹோட்டலின் வரவேற்பு அறையில் பொதுமக்கள் மத்தியில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் பலாத்கார முயற்சி - இளம்பெண்ணை காப்பாற்றிய திருநங்கைகள்