தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யோகி அரசை கண்டித்த பாஜக எம்பி வருண் காந்தி

விவசாயிகள் விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசு மோசமாக நடந்துகொள்வதாக பாஜக எம்பி வருண் காந்தி கட்டமாக விமர்சித்துள்ளார்.

வருண் காந்தி
வருண் காந்தி

By

Published : Oct 29, 2021, 7:41 PM IST

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு மீது அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் வருண் காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அம்மாநிலத்தில் விவசாயப் பொருள்கள் கொள்முதலில் அரசு அலுவலர்கள் அலட்சியம் காட்டுவதை குறிப்பிட்டு வருண் காந்தி விமர்சித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான காணொலியை பகிர்ந்த வருண் காந்தி, "விவசாயிகள் படும் துன்பத்தை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. லக்கிம்பூர் கேரி, பிலிபித் என 17 மாவட்டங்களில் விவசாயிகள் பிரச்னை தீவிரமாக உள்ளது.

அரசு அலுவலர்கள் விவசாயிகளிடம் ஒரு குவின்டால் பயிரை ரூ.1,200க்கு வாங்கி, வெளியே சந்தையில் ரூ.1,900க்கு விற்கின்றனர். ஏற்கனவே விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இந்த சூழலில் அவர்களை மேலும் துன்புறுத்தக்கூடாது.

இந்த ஊழல், கொடுமைக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நான் அரசின் பக்கம் நிற்கமாட்டேன். நீதிமன்றத்தை நாடி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தருவேன்" என எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க:திரிணாமுல் காங்கிரசில் இணைந்த டென்னிஸ் ஜாம்பவான்

ABOUT THE AUTHOR

...view details