வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.
வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! - வன்னியர் உள்ஒதுக்கீடு
டெல்லி: வன்னியருக்கு 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாடு அரசு கொண்டு வந்த இந்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மதுரையைச் சேர்ந்த அபிலேஷ்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.