டெல்லி: வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நேற்று (செப். 24) காணொளி மூலம் துவக்கி வைத்தார். இந்த ரயிலானது இரு கோச்களின் அடிப்படையில் எட்டு பெட்டிகளுடன் 530 பயணிகள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த 8 பெட்டிகளுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுக்கு ஆன மொத்த செலவு 60 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டிற்குள் மட்டும் பயணிக்கும் 2ஆவது வந்தே பாரத் ரயில், நெல்லை - சென்னை வரை இயக்கப்படுகிறது. முதல் ரயில் சென்னை - கோவை வரை இயக்கப்படுகிறது. இந்த நிலையில் வந்தே பார்த் ரயிலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறுகையில், "இந்த வந்தே பாரத் ரயிலானது பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.
மேலும், இந்த ரயிலானது புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டு மற்ற ரயில்களைக் காண்பதில் இருந்து வித்தியாசமாக இருக்கும். பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. முன்னதாக, ரயில் ஓட்டுநர் மற்றும் கடைசி பெட்டியில் இருக்கும் கார்டு பேசுவதற்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டு வந்தது.
தற்போது வந்தே பாரத் ரயிலில், ரயில் ஓட்டுநர் காவலரிடம் திரைப்பகுதியில் உள்ள நேரடி மைக் மூலம் பேசும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், ரயிலில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கும் போதும் சில பயணிகள் தடையை மீறி கழிவறையில் புகை பிடிக்கிறார்கள். இதனால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகின்றன. அது மட்டுமன்றி நோய்கள் பரவுகின்றன. இந்த குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.