தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் மேற்கு வங்கத்தில் கைது! - Vanathi Srinivasan arrested in West Bengal

மேற்கு வங்கத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் மேற்கு வங்கத்தில் கைது!
பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் மேற்கு வங்கத்தில் கைது!

By

Published : May 8, 2021, 10:46 AM IST

நந்திகிராம் தொகுதியில் மம்தா தோற்றதால் ஆத்திரமடைந்த திரிணாமுல் தொண்டர்கள், பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தினர். காயமடைந்த பாஜகவினரை நேரில் சந்திக்க தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் அங்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக வானதி சீனிவாசன் மேற்கு வங்க காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ”ஒரு அமைதி போராட்டத்திற்கு கூட மேற்கு வங்கத்தில் அனுமதி இல்லை எனவும், எம்எல்ஏவான தனக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்களின் நிலை எப்படி இருக்கும்” என ட்விட்டரில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details