தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை: வல்சராஜ் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

புதுச்சேரி: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என மாநில காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் வல்சராஜ் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை

By

Published : Mar 12, 2021, 8:07 AM IST

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வல்சராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "1990ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வந்தேன். அதில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்றேன். அமைச்சராகவும் பதவி வகித்தேன். தற்போது தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை.

எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும். இளைஞர்களுக்கு பொறுப்பு கிடைக்க வேண்டும் என நினைத்தேன். கடைசி நேரத்தில் அழுத்தம் வந்ததால் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை. ஆனால், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபடுவேன்" என்றார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் காங்கிரஸ் 15; திமுக 13 இல் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details