தமிழ்நாடு

tamil nadu

Valentines Week 2023: முத்தங்களுக்கும் மொழிகள் உண்டு!

By

Published : Feb 13, 2023, 4:40 PM IST

காதலர் தின வாரத்தில் இன்று (பிப்.13) முத்த தினம் கொண்டாடப்படுகிறது. உணர்ச்சியின் முக்கிய வெளிப்பாடாக பார்க்கப்படும் முத்தங்களில் இருப்பது பல ரகம். எனினும், காதலர்கள் விரும்பும் ஒருசில முத்தங்களின் வகைகளைப் பார்ப்போம்...

காதல் முத்தங்கள்
காதல் முத்தங்கள்

ஹைதராபாத்:காதலர் தினம் நாளை (பிப்.14) கொண்டாடப்படும் நிலையில், காதலர் தின வாரம் கடந்த 7-ம் தேதி ரோஜா தினத்துடன் தொடங்கியது. அதன்பிறகு காதலுடன் தொடர்புடைய ப்ரபோஸ் டே, சாக்லேட் டே ஆகியவை கொண்டாடப்பட்டன. அந்த வகையில் காதலர் தின வாரத்தில் இன்று (பிப்.13) முத்த தினம் (Kiss day) கொண்டாடப்படுகிறது.

தன் இணை மீது வைத்துள்ள அன்பின் உச்சபட்ச வெளிப்பாடாகவே முத்தம் பார்க்கப்படுகிறது. இது காதலர்கள் இடையேயான அன்பை மேலும் வலுப்படுத்துகிறது. முத்தங்களின் வகைகளை வரையறுக்க வேண்டும் என்றால், பெருங்கடலை ஒரு பாட்டிலுக்குள் அடைப்பது போன்றது. எனினும், ஒருசில முத்தங்கள் மற்றும் அதன் அர்த்தத்தை பார்ப்போம்.

கன்னத்தில் முத்தம்: கன்னத்தில் முத்தமிடுவது பாசத்தை வெளிப்படுத்தும் அடையாளம். நெருங்கி பழகுவோரை அடிக்கடி பார்க்கும் போதும், அவர்களை வாழ்த்தும் போதும் கன்னத்தில் முத்தமிடுவது இயல்பு.

கன்னத்தில் முத்தம்

நெற்றி முத்தம்: அன்பாக நெற்றி மற்றும் தலையில் முத்தமிடுவது நீங்கள் அரவணைப்புடன் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.

நெற்றி முத்தம்

அதாவது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் மௌன மொழியே நெற்றி முத்தம். இருவரது உறவில் நெருக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கிறது.

கையில் முத்தம்: கையில் முத்தமிடுவது, உங்கள் இணை உங்களை அதிகம் மதிக்கிறார் என்பதை குறிக்கும். உங்கள் இணைக்கும் நீங்கள் மிகவும் ஸ்பெஷல் என்பது இதன் அர்த்தம்.

கையில் முத்தம்

மூக்கு முத்தம்: உங்கள் இணையை நீங்கள் ஆழமாக காதலிப்பதை குறிப்பது. இது உங்கள் இணையின் மீதான அன்பு, அரவணைப்பை வெளிப்படுத்துவது. காமத்தை வெளிப்படுத்துவது அல்ல.

மூக்கு முத்தம்

கழுத்தில் முத்தம்:இது உணர்ச்சிவசத்தில் காதலர்கள் பரிமாறிக் கொள்வது. கிட்டத்தட்ட காம உணர்ச்சியின் பிரதிபலிப்பு என்றே வைத்துக் கொள்ளலாம்.

கழுத்தில் முத்தம்

உதட்டில் முத்தம்:அதீத ஈர்ப்பில் இருக்கும் காதல் ஜோடிகள் பரிமாறிக் கொள்வது.

உதட்டில் முத்தம்

இதையும் படிங்க: Dry dating: "ட்ரை டேட்டிங்" என்றால் என்ன? ட்ரெண்டில் இருப்பது ஏன்?

ABOUT THE AUTHOR

...view details