மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் டிசம்பர் 25, 1924 இல் பிறந்த வாஜ்பாய், ஜனசங்கம் ஆரம்பித்தபோது முக்கிய நிர்வாகியாக இருந்தவர். பாஜகவை கட்டமைத்து 1990களில் முதல்முறையாக காங்கிரஸ் இல்லாத கட்சியாக பாஜக ஆட்சி அமைக்க வாஜ்பாய் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 96ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாப்படுகிறது. இதனையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, "வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான வாஜ்பாயின் முயற்சிகள் என்றென்றும் நினைவில் இருக்கும். அவரது தொலைநோக்கு பார்வை, தலைமையின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் பல சிகரங்களை எட்டியது " என்று தெரிவித்துள்ளார்.