இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அன்று, நிவர் புயல் தாக்கியபோது, காஞ்சிபுரம் அருகே உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் மின் வயர்கள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உதவிப் பொறியாளரான சுந்தரராஜன், பக்கத்து மின் நிலையத்தில் பணியாற்றிய பாக்கியநாதன், தயாளன் ஆகியோரை மின் இணைப்பை சரி செய்யக் கூறியுள்ளார். ஆனால், அவர்களை பணிக்கு அனுப்பிய விவரத்தை, சக பணியாளர்களுக்கு, அவர் தெரிவிக்கவில்லை.
அவர்கள் இருவரும், இரவு கையில் டார்ச் லைட்டுடன் மழைநீர் தேங்கியிருந்த பகுதிக்குச் சென்று, அறுந்து விழுந்து கிடந்த வயர்களைச் சுற்றிக் கொண்டு இருக்கும்போது, மின் நிலையத்திற்கு வந்த மற்றொரு பணியாளர், மின் இணைப்பைக் கொடுத்து விட்டார். இதனால் மின்சாரம் பாய்ந்து, அந்த இடத்திலேயே இருவரும் இறந்தனர். இதையடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட உதவிப் பொறியாளர் சுந்தரராஜன் உள்ளிட்ட நான்கு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.