வதோதரா(குஜராத்): குஜராத் மாநிலம், வதோதரா மாநகராட்சி முதன்முறையாக துப்புரவுப் பணியை மேற்கொள்ளும் ரோபோட்டிக் இயந்திரத்தை துப்புரவுப்பணிகளுக்கு ஈடுபடுத்தியுள்ளது.
சூரிய சக்தியில் செயல்படும் இந்த இயந்திரத்தை இரண்டு பேர் கொண்டு இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய குஜராத் விஜ் கம்பெனி லிமிடெட், தனது நிறுவன சமூக சேவை முயற்சியின்கீழ், மாநகராட்சிக்கு இதனை வழங்கியுள்ளது.
இது சாக்கடைகளில் இருக்கும் அடைப்புகளை சுத்தப்படுத்தும் வகையில் சூரிய சக்தி கொண்டு இயக்கப்படுகிறது. இது கேமரா, ஜிபிஎஸ், வாயு வெளியேறுவதை உணரும் திறன் கொண்ட சென்சார் ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சாக்கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களையும் இது பிரித்து அளிக்கும் வல்லமை கொண்டது.
5 மனிதர்கள் செய்யும் துப்புரவுப் பணியை ஒரு ரோபோட்டிக் இயந்திரம் மற்றும் இரண்டு மனிதர்களைக் கொண்டு எளிதாக சுத்தம் செய்யலாம் என வதோதரா மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இத்தாலிய வீரர்களால் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: ரூ.10 கோடி இழப்பீட்டுடன் முடித்துவைப்பு