தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிக தடுப்பூசிகள் தேவைப்பட்டால் மாநில அரசு செலவு செய்ய வேண்டும் - மத்திய அரசு

கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

By

Published : Apr 24, 2021, 10:59 AM IST

Updated : Apr 24, 2021, 1:05 PM IST

10:57 April 24

மத்திய அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசி மாநிலங்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்

அதிக தடுப்பூசிகள் தேவைப்பட்டால் மாநில அரசு செலவு செய்ய வேண்டும் - மத்திய அரசு

மத்திய அரசு கொள்முதல் செய்யும் கரோனா தடுப்பூசி ( கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள்) மாநிலங்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும், மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளுக்கான செலவினத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இரண்டு மடங்காக உயர்த்தியது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளில் 600 ரூபாய்க்கும் தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்தது. மே 1ஆம் தேதி முதல் மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் கோவிஷீல்டு மருந்துகளை நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், சீரம் நிறுவனம் தடுப்பூசியின் விலையை உயர்த்தியது மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்தது. 

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர்கள் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தார்கள். மேலும் இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு நேரடியாக கடிதம் எழுதியதோடு, ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில்தான் மத்திய அரசு, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் ரூ.150-க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Last Updated : Apr 24, 2021, 1:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details