தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இந்தியாவில் தடுப்பூசி வீணாவது குறைந்துள்ளது'- மத்திய சுகாதாரத்துறை - சுகாதாரத்துறை செயலர் லவ் அகர்வால்

மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி வீணாவது குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Lav Agarwal
Lav Agarwal

By

Published : May 22, 2021, 9:48 PM IST

இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பங்கேற்றுப் பேசிய சுகாதாரத்துறை செயலர் லவ் அகர்வால், "இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி வீணாகும் எண்ணிக்கை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. இது நம்பிக்கை தரும் அம்சமாகும். மார்ச் 1ஆம் தேதியிலிருந்து மே 18ஆம் தேதி ஒப்பிடுகையில் கோவாக்ஸின் தடுப்பூசி வீணாவதன் விழுக்காடு 17இல் இருந்து 4ஆக குறைந்துள்ளது.

இதே காலகட்டத்தில் கோவிஷீல்டு வீணாவதன் விழுக்காடு 8இல் இருந்து 1ஆக குறைந்துள்ளது. இதை மேற்கொண்டு குறைக்கும் நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். நாட்டின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது.

நாள்தோறும் நூறுக்கும் மேற்பட்ட பாதிப்புகளை பதிவு செய்த மாவட்டங்களின் எண்ணிக்கை 531இல் இருந்து 468ஆக குறைந்துள்ளது. அதேவேளை பரிசோதனை எண்ணிக்கையும் கடந்த இரு நாள்களில் தல 20 லட்சத்தை தாண்டியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:’பாபா ராம்தேவ்வுக்கு எதிராக பேரிடர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுங்கள்’ - இந்திய மருத்துவக் கூட்டமைப்பு

ABOUT THE AUTHOR

...view details