ஹைதராபாத்: இந்தியாவில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் வரும் மே 1ஆம் தேதி தொடங்குகிறது. இதன் செலவீனம் தொடர்பாக இந்தியா ரேட்டிங் அண்டு ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 133.26 கோடியாக உள்ள நிலையில், தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களின் எண்ணிக்கை 84.19 கோடியாக உள்ளது.
மேற்கண்ட 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ரூ. 67,193 கோடி செலவாகும் எனவும், அதில் மாநிலங்களுக்கு ரூ. 46,323 கோடி செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.