தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Vaccination Mandatory: புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்...!’ - கொரோனாத் தடுப்பூசி

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் தடுப்பூசிச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அங்கே மருத்துவப் பணியாளர்கள் கொண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Vaccination Mandatory:’புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி கட்டாயம்...!’
Vaccination Mandatory:’புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி கட்டாயம்...!’

By

Published : Dec 22, 2021, 8:57 PM IST

புதுச்சேரி:புதுச்சேரியில் கரோனா தடுப்பு ஊசி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஊரடங்கின்றி அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என சுகாதாரத்துறை சார்பில் தீவிரச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பல்வேறு பகுதியில் முகாம் அமைக்கப்பட்டுத் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அங்கே தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

சட்டப்பேரவைக்குள் தடுப்பூசி கட்டாயம்

கடந்த சில நாட்களாக துணைநிலை ஆளுநர், பல்வேறு வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து அங்கேயே அவர்களுக்குத் தடுப்பு ஊசி செலுத்தி வந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திற்குள் வரும் ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அங்கே சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசியும் செலுத்தி வருகின்றனர். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் முகாம் அமைத்து உள்ளே வருபவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்த்துத் தடுப்பூசி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'மலைப்பாதை நெடுஞ்சாலையில் நிலச்சரிவுகள், மண் சரிவுகளுக்குத் தீர்வு காண புதிய முயற்சி'

ABOUT THE AUTHOR

...view details