காசிபூர்:குடும்பத் தகராறில் தந்தையை கட்டிப்போட்டு கை விரல்கள் மற்றும் பிறப்புறுப்பை வெட்டியதாக ராணுவத்தில் இருந்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம், காசிபூரை சேர்ந்த முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ராணுவத்தில் இருக்கும் அவரது மகன் அர்பித்துடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தனியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்பத் தகராறில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக வீட்டில் தனிமையில் இருந்த தன்னை, நண்பர்களுடன் சேர்ந்து கட்டிப்போட்டு அர்பித் துன்புறுத்தியதாக முதியவர் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குவாதம் முற்றி, தன் நண்பர்களுடன் சேர்த்து தனது இடது கை விரல்கள் மற்றும் பிறப்புறுப்பை வெட்டி அர்பித் தப்பியதாக முதியவர் கூறியுள்ளார்.